செய்திகள்

வாரிசு படத்தின் வெளியீட்டு உரிமம் யாருக்கு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம். 

DIN


விஜய், ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ள இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது. 

சமீபத்தில் வாரிசு படத்திலிருந்து ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி 50 மில்லியன் (5 கோடி) பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது. 

திரையரங்க ஒதுக்கீட்டிற்காக ரெட் ஜெயன்ட்  மூவிஸ் நிறுவனம் 670க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் துணிவு படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் இது வாரிசு படத்திற்காக ஒதுக்கப்படும் திரைகளை விட கூடுதல் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் படத்தினை யார் வெளியிடுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருந்தது. 

இந்நிலையில், நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம். மாஸ்டர் படத்தினை வெளியிட்டதும் இதே நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூரவ் அறிவிப்பாக வெளியிட்டு உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 7.06 கோடியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம்: முதல்வா் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடக்கிவைத்தாா்

பாஜக பிரமுகா் தற்கொலை

ஜியோ-பிபி ‘ஆக்டிவ்’ பெட்ரோல் அறிமுகம்

சாத்தூா் அருகே அந்தியோதயா ரயில் என்ஜின் பழுது: பிற ரயில்கள் வழியில் நிறுத்தி வைப்பு

குடியாத்தம் நகராட்சியில் ரூ.12.92 கோடியில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள்

SCROLL FOR NEXT