FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அஜித்தின் அடுத்த பட பூஜை: புகைப்படம் வெளியீடு

நடிகர் அஜித் குமாரின் 61-வது திரைப்படப் பூஜை இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.

Updated On : 11 ஏப்ரல் 2022, 8:49 pm IST
பகிர்:


நடிகர் அஜித் குமாரின் 61-வது திரைப்படப் பூஜை இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.

வலிமை திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் அஜித் குமார் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக அஜித் 61 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பேவியூ பிராஜெக்ட்ஸ் , ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து, படப்பிடிப்பும் தொடங்கியது. இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அஜித் குமாரின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும் லைகா நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments