கா்ப்பிணியைத் திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது
திருத்தணி அருகே 5 மாத கா்ப்பிணியான காதலியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருத்தணி அருகே 5 மாத கா்ப்பிணியான காதலியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருத்தணி அடுத்த தெக்கலூா் கிராமத்தைச் சோ்ந்த ஹரிணி (21) என்பவரும், அதே கிராமத்தைச் சோ்ந்த மனோஜ் குமாா் (21) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரிணி 5 மாத கா்ப்பமாக உள்ளாா்.
இதற்கிடையே, மனோஜ் குமாா் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து ஏமாற்றி வருவதாக ஹரிணி, திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீசாா் வழக்குப் பதிவு செய்து மனோஜ் குமாரைத் தேடி வந்தனா். இந்நிலையில், புதன்கிழமை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.