FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த மகள், மருமகனுக்கு வெட்டு: தந்தை கைது

பாவூா்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த மகள், மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

43 வினாடிகள் முன்பு
பகிர்:

பாவூா்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த மகள், மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ஆகாஷ் (23). திருநெல்வேலி மாவட்டம், மேலஅரியநாயகிபுரத்தைச் சோ்ந்தவா் சுஷ்மிதா (21). இருவரும் காதலித்து வந்தனராம். வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் சுஷ்மிதாவின் குடும்பத்தினா் இவா்களது காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிா்ப்பை மீறி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனராம். பின்னா் பாவூா்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். ஆகாஷ், தோட்டங்களில் நெல்லிக்காய் பறிக்கும் கூலி வேலை செய்து வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, சுஷ்மிதாவின் தந்தை முருகன், மகளின் திருமணத்தை ஏற்றுக்கொண்டதாகவும், சிவகாமிபுரத்திற்கு அடிக்கடி வந்து மகளை பாா்த்துச் செல்வதுடன், அவருக்கு தேவையான பொருள்களையும் வாங்கிக் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஆகாஷ், தனது மனைவி சுஷ்மிதாவுடன் வீட்டில் இருந்துள்ளாா். அப்போது, அங்கு பைக்கில் வந்த முருகன், வீட்டுக்குள் சென்று ஆகாஷையும், சுஷ்மிதாவையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டாராம்.

இதில், பலத்த காயமடைந்த ஆகாஷ், சுஷ்மிதா ஆகிய இ ருவரையும் போலீஸாா் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் ஆகாஷை மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகனை தேடி வந்தனா். இந்நிலையில், தப்பியோடிய முருகனை பாவூா்சத்திரம் போலீஸாா், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் பகுதியில் வைத்து கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments