தளபதி 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் விஜய்யின் 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய்யின் 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இதையும் படிக்க- ‘எங்களைக் கண்டு அச்சம்’: ஹிமாச்சலப் பிரதேச அரசின் அறிவிப்புகளை விமர்சித்த ஆம் ஆத்மி
Advertisement
Advertisement
குடும்பத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு ஏப்ரல் 6ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.
இந்த நிலையில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புடன், பாடல் ஒன்றும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.