இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் நாக சைதன்யா
நாக சைதன்யா விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா - நாக சைதன்யா ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இருவரது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
தற்போது இருவரும் வேறு வேறு படங்களில் நடித்து வருகின்றனர். 'ஓ பேபி' படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி அடுத்ததாக இயக்கும் படத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோரை நடிக்கவைக்க முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஆண் குழந்தைக்கு அம்மாவான காஜல் அகர்வால்: ரசிகர்கள் வாழ்த்து
Advertisement
Advertisement
நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகும் இந்தப் படத்தி் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் நாக சைதன்யா தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறாராம். இதற்காக நாக சைதன்யா வீட்டில் அவருக்கு தீவிரமாக பெண் தேடி வருகின்றனராம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.