FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பாலியல் வன்கொடுமைப் புகார்: பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு

படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி இளம் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த நடிகர் விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்தது காவல்துறை.

Updated On : 27 ஏப்ரல் 2022, 6:14 pm IST
விஜய் பாபு
பகிர்:

படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி இளம் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த நடிகர் விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்தது காவல்துறை.

மலையாளத்தில் தயாரிப்பாளராகவும் பிரபல நடிகராகவும் இருப்பவர் விஜய் பாபு(45). 

‘ஹோம்’ ‘ஆடு’ ‘திருச்சூர் பூரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள விஜய் பாபு கடந்த சில நாள்களுக்கு முன் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்தார் என துணை நடிகை ஒருவர் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

Advertisement

Advertisement

புகாரில்,  ‘சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் எனக்கு நடிகர் விஜய் பாபு அறிமுகமானார். சில தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்கியதால் நெருக்கமான நண்பராகவும் இருந்தார்.

இந்நிலையில், அவர் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடந்த வாரம் வரை என்னை தாக்குவதும் பாலியல் வன்கொடுமை செய்வதும் தொடர்ந்து வந்தது. மேலும், அந்தரங்க விடியோவைக் காட்டி விஜய் பாபு மிரட்டிவருகிறார். இனியும் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் நடிகைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும், வன்கொடுமைகளும் அதிகரித்து வருவதாக பலர் குற்றம் சாட்டி வரும் வேளையில் விஜய் பாபு மீதான இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, நடிகை பாவனா அளித்த பாலியல் புகாரில் நடிகர் திலீப் மீதான விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments