இரவின் நிழல் முதல் பாடல்: மே 1-இல் வெளியீடு
பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் முதல் பாடல் மே 1-ம் தேதி வெளியாகிறது.
பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் முதல் பாடல் மே 1-ம் தேதி வெளியாகிறது.
ஒத்த செருப்பு திரைப்படத்துக்குப் பிறகு, பார்த்திபன் இரவின் நிழல் படத்தை இயக்கி வருகிறார். ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் நடித்த ஒரே கதாபாத்திரம் மட்டும் இடம்பெற்றது. இரவின் நிழல் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த மார்ச் 19-ம் தேதி வெளியானது.
Advertisement
Advertisement
தற்போது படத்தின் முதல் பாடல் வரும் மே 1-ம் தேதி மாலை வெளியாகவுள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் த்வனி யூட்யூப் பக்கத்தில் மட்டுமே இந்தப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நேரலை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.