பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு! ரயில்வேயில் 3,548 விண்ணப்பிப்பது எப்படி..?
இந்திய ரயில்வேயில் பட்டதாரி நிலையிலான தொழில்நுட்பம் அல்லாத 3,548 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து...
இந்திய ரயில்வேயில் பட்டதாரி நிலையிலான தொழில்நுட்பம் அல்லாத 3,548 தலைமை வர்த்தக மற்றும் பயணச்சீட்டு மேற்பார்வையாளர், சரக்கு ரயில் மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர் மற்றும் மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு இளநிலைப் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு வேலை, வங்கி வேலை மற்றும் ரயில்வே வேலைக்காக தயாராகி வரும் பட்டதாரி இளைஞர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.
இது குறித்த விவரங்களை பார்ப்போம்...
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 6/2026
Advertisement
Advertisement
பணி: தலைமை வர்த்தகப் பணியாளர் – பயணச்சீட்டு மேற்பார்வையாளர்(Chief Commercial – Ticket Supervisor)
காலியிடங்கள்: 127
சம்பளம்: மாதம் ரூ.35,400
பணி: சரக்கு ரயில் மேலாளர்(Goods Train Manager)
காலியிடங்கள்: 2750
சம்பளம்: மாதம் ரூ.29,200
பணி: இளநிலை கணக்கு உதவியாளர் – தட்டச்சுப் பணியாளர்(Junior Account Assistant – Typist)
காலியிடங்கள்: 300
சம்பளம்: மாதம் ரூ.29,200
பணி: மூத்த எழுத்தர் – தட்டச்சர்(Senior Clerk – Typist)
காலியிடங்கள்: 371
சம்பளம்: மாதம் ரூ.29,200
தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம், ஹிந்தியில் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கான இறுதித் தேர்வின் முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. கல்விச் சான்றிதழ்களில் (தற்காலிக அல்லது நிரந்தரச் சான்றிதழ்கள்) அவை வழங்கப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை, இந்தச் சான்றிதழ்கள் அறிவிக்கையின் கடைசித் தேதிக்குப் பிறகு வழங்கப்பட்டிருந்தால், இறுதித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியைக் கொண்ட ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் அல்லது ஒவ்வொரு பருவத்தேர்வு, ஆண்டுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியைக் கொண்ட தனித்தனி மதிப்பெண் பட்டியல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஏதேனும் ஒரு சான்றிதழில் முடிவு அறிவிக்கப்பட்ட தேதி குறிப்பிடப்படவில்லை எனில், அந்தத் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதியைக் குறிப்பிடும் சான்றிதழை, ஆவணச் சரிபார்ப்பின் போது அந்தந்த கல்வி நிறுவனம், பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான கல்வி தகுதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆர்ஆர்பி மண்டல வாரியான காலிப்பணியிட விவரங்கள்:
பிலாஸ்பூர் - 542, ராஞ்சி - 377, பெங்களூரு - 346, கொல்கத்தா - 332, அஜ்மீர் - 304, சிலிகுரி - 291, பிரயாக்ராஜ் - 265, போபால் - 157, மும்பை - 155, புவனேஸ்வர் - 146, சென்னை - 141, குவஹாத்தி - 104, முசாஃபர்பூர் - 78, ஜம்மு-ஸ்ரீநகர் - 66, சண்டிகர் - 59, செகந்திராபாத் - 56, கோரக்பூர் - 30, பாட்னா - 29, மால்டா - 26, திருவனந்தபுரம் - 25, அகமதாபாத் - 19.
வயதுவரம்பு: 1.1.2027 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்கள், மாற்றுத்திறனாளிகள் ( எஸ்சி, எஸ்டி) பிரிவினருக்கு 15 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள் (ஓபிசி) பிரிவினருக்கு 13 ஆண்டுகள் வரையும் உச்ச வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் பொது அறிவு, கணிதம், பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு போன்ற பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். இரண்டு கட்ட தேர்வுகளுக்கான பாடத்திட் டம், மதிப்பெண்கள் விபரம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும். எழுத்துத்தேர்வில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வுக் கட்டணம்: பொது, ஓபிசி, பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர்களுக்கு ரூ.500. தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி தரப்படும். இதர எஸ்சி,எஸ்டி, பெண்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர்களுக்கு ரூ,250. தேர்வு எழுதிய பிறகு முழுக் கட்டணமும் திருப்பி தரப்படும். தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதர விவரங்களை www.rrb.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.11.2026 இரவு 11.59 மணி வரை
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
RRB NTPC (Graduate Level) Recruitment 2026: Railway Recruitment Board invites online recruitment applications through Railway Recruitment Board website
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.