FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்

மின்வாரியத்தில் 2600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் பேசியது குறித்து...

19 அக்டோபர் 2026, 1:29 pm IST
அமைச்சர் நிர்மல் குமார் - எக்ஸ்
பகிர்:

மின்வாரியத்தில் 2600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக 2400 பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று (அக். 19) தெரிவித்தார்.

சென்னையில் இது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது:

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 500 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. கேபிள் பழுது ஏற்பட்டுள்ள இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

மின்வாரியத்தில் 2600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக 2400 பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

புதிய டெண்டர் மூலம் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். டெண்டர் மூலமே இனியும் நியமிக்கப்படுவர். ஏற்கெனவே 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

டிஎன்பிஎஸ் சி மூலம் மின்வாரிய ஊழியர்களைத் தேர்வு செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. பழைய வண்ணாரப்பேட்டையில் 3 நாள்கள் மின் வெட்டு என்பது தவறான தகவல்.

மழைக்காலத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் இரண்டரை மாதம் ஒத்திவைத்துள்ளோம்.

மெத்தபெட்டமைன் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. 3 மாதங்களில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது சிரமம். எனக் குறிப்பிட்டார்.

summary

2600 contract employees selected in Electricity Board 2400 additional employees! Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments