முகப்பு
செய்திகள்

'ஷங்கர் சார்.. அதிதியை காதலிக்கிறேன்’: பிரபல நகைச்சுவை நடிகர்

விருமன் திரைப்படம் பார்த்த பிறகு நடிகை அதிதியைக் காதலிப்பதாக பிரபல நடிகர் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

Updated On : 12 ஆகஸ்ட் 2022, 12:38 pm IST
அதிதி
பகிர்:

விருமன் திரைப்படம் பார்த்த பிறகு நடிகை அதிதியைக் காதலிப்பதாக பிரபல நடிகர் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ திரைப்படம் இன்று வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ளதால் பல இடங்களிலும் அதிகாலைக் காட்சியில் ரசிகர்கள் படம் பார்த்தனர். 

இப்படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

Advertisement

இந்நிலையில், திரைப்படத்தின் மீதான விமர்சனத்தைப் பெறுவதற்கு யூடியூப் சேனல்கள் சென்னையில் உள்ள தனியார் திரையரங்கம் ஒன்றில் காத்திருந்தபோது படம் முடிந்த வெளியே வந்த பிரபல நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் ‘பிரமாண்ட இயக்குநரின் மகளைப் பார்க்கத் தான் வந்தேன். மாமனார் ஷங்கர் சார்... அதிதியைக் காதலிக்கிறேன். நீங்க பெரிய இடம். நான் ஏழை. திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் கமிஷ்னர் அலுவலகம் செல்வேன்’ எனப் பதாகை ஒன்றைக் காட்டி நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

கூல் சுரேஷ்

யூடியூப் திரை விமர்சனங்களில் கூல் சுரேஷ் பிரபலம் என்பதால் சமீப காலமாக வெளியாகும் அனைத்துப் படத்திற்கும் அவர் நகைச்சுவையாக விமர்சனம் செய்வது டிரெண்ட் ஆகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.