விஷாலின் பிறந்த நாள் பரிசாக வெளியானது 'மார்க் ஆண்டனி' முதல் பார்வை
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி பட முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி பட முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
'திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. சிம்பு சரியாக ஒத்துழைக்காததால்தான் இந்தப் படம் தோல்வியைடந்ததாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் குற்றம்சாட்டியது அனைவரும் அறிந்ததே.
இதனையடுத்து பிரபு தேவா நடிப்பில் பகீரா என்ற படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலுடன் கைகோர்த்துள்ளார்.
Advertisement
Advertisement
'மார்க் ஆண்டனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துவருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இதையும் படிக்க | காதலியைக் கரம்பிடிக்கும் விஜய் டிவி புகழ் - திருமண தேதி அறிவிப்பு
இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதியாக இன்று (ஆகஸ்ட் 29) விஷால் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்த நாள் பரிசு அளிக்கும் விதமாக படக்குழு மார்க் ஆண்டனி பட முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.