சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' - முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் வெற்றிபெற்ற ஜதி ரத்னாலு பட இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். இந்தப் படத்தில் உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். சுரேஷ் புரொடக்சன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தைத் தயாரித்துவருகின்றன.மேலும் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
தற்போது இந்த படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. படம் தீபாவளிக்கு வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.