துணிவு ’சில்லா..சில்லா’ வெளியீட்டு நேரம் குறித்து தகவல்
துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ’சில்லா சில்லா’ பாடல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ’சில்லா சில்லா’ பாடல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: மீண்டாரா, 'பழைய’ வடிவேலு? நாய் சேகர் ரிட்டன்ஸ் - திரை விமர்சனம்
Advertisement
Advertisement
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள அஜித் அறிமுக பாடலான ‘சில்லா..சில்லா’ பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.