சன்னி லியோன் படத்திற்கு சிறுவர்கள் அனுமதி... ஆனால்? வெளியானது தணிக்கைச் சான்றிதழ்!
சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ எனும் திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.
கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன். 2012 முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ எனும் தமிழ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஏயு தயாரித்துள்ள இந்தப் படத்தினை ஆர். யுவன் இயக்கியுள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. யு/ஏ கிடைத்துள்ளது. இதனால் சிறுவர்கள் படத்திற்கு தனியாக செல்லக்கூடாது. பெற்றோர்களின் அனுமதியுடன் செல்ல வேண்டும். காமெடி த்ரில்லர் கலந்த இந்தத் திரைப்படம் டிசம்பர் 30ஆம் நாள் வெளியாக உள்ளது.
Advertisement
Advertisement
Related Article
‘ரஞ்சிதமே’ பாடலின் புதிய சாதனை: பாடலாசிரியர் விவேக் கூறியது என்ன?
‘சூரரைப் போற்று’ இயக்குநர் வாங்கிய முதல் கார்: ராசியான எண் 6?
சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் சமந்தா?
சீரியலிலிருந்து விலகுகிறேன்: 'பாக்கியலட்சுமி' நடிகை திவ்யா கணேஷ்
சூர்யா 42: எண்ணூர் துறைமுகத்தில் பிரம்மாண்ட படப்பிடிப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.