முகப்பு
செய்திகள்

‘கீழ்சாதின்னு சொல்ற அடையாளம் மாறலையே’: தமிழ்க்குடிமகன் டீசர் வெளியீடு

இயக்குநர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்க்குடிமகன் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 23 டிசம்பர் 2022, 7:24 pm IST
பகிர்:

இயக்குநர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்க்குடிமகன் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘ஆட்டோகிராப்’ படத்தின் மூலம் மக்களின் மத்தியில் கவனம் பெற்ற இயக்குநரும் நடிகருமான சேரன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தமிழ்க்குடிமகன். 

லக்‌ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பகிரி’, ‘பெட்டிக்கடை’ படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவெ இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சாதியும், அதற்குண்டான தொழிலையும் கட்டாயப்படுத்தும் அமைப்பு முறைக்கு எதிரானதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசருக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.