உங்களைப் பார்க்க வருகிறாள் பேரரசி சன்னி லியோன்!
சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன். 2012 முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ எனும் தமிழ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஏயு தயாரித்துள்ள இந்தப் படத்தினை ஆர். யுவன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. யு/ஏ கிடைத்துள்ளது. காமெடி த்ரில்லர் கலந்த இந்தத் திரைப்படம் டிசம்பர் 30ஆம் நாள் வெளியாக உள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Related Article
‘கோல்டு’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
'வெண்ணிலா கபடி குழு' பட நடிகர் மாயி சுந்தர் காலமானார்
அதிரடி காட்சிகளில் கலக்கும் ‘ராங்கி’ த்ரிஷா
''பெரியவரே.. பெரியாரே''! 'இனியா' சீரியலில் பெண்களை ஈர்க்கும் பெரியார் கருத்துகள்!
“விமர்சகர்கள் மூலம் திரைப்படத்தை பார்க்காதீங்க”: நடிகர் விஜய்சேதுபதி வேண்டுகோள்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.