FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

'உனக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் வருது' : அஜித் குறித்து பிரபல நடிகை வியப்பு

உனக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் வருது என  அஜித் குறித்து பிரபல நடிகை தெரிவித்துள்ளார். 

Updated On : 25 பிப்ரவரி 2022, 3:38 pm IST
பகிர்:

நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை படம் குறித்து தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். அவரது பதிவில், ''என்னுடைய ஜார்ஜ் க்ளூனே (அமெரிக்க நடிகர்) தல, உனக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் வருது.

அஜித், தயாரிப்பாளர் போனி கபூர், வினோத் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஹுமா குரேஷி இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக கேள்விப்பட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள், பைக் ரேஸ் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

Advertisement

Advertisement

போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திகேயா வில்லனாக நடிக்க, சுமித்ரா, ஹுமா குரேஷி, ராஜ் அய்யப்பா, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார். நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments