இயக்குநர் சசி - ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில் டீசர் விடியோ
இயக்குநர் சசி மற்றும் ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள படம் நூறு கோடி வானவில். இந்தப் படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார். சொல்லாமலே படத்தின் மூலம் 90களின் காலகட்ட காதலை மிக அழகாக பதிவு செய்தவர் இயக்குநர் சசி. நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்றைய காலகட்ட காதலை நூறு கோடி வானவில் படத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார்.
இதையும் படிக்க | சூர்யா தயாரிப்பில் கார்த்தியின் 'விருமன்' முதல் பார்வை போஸ்டர் வெளியானது
Advertisement
Advertisement
டீசரில் வண்ணமயமான காட்சிகள் கண்ணை கவருகின்றன. சித்து குமாரின் இசையும் சிறப்பாக இருக்கிறது. இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. உணர்வுப்பூர்வமான காதல் படங்களின் வரிசையில் இந்தப் படம் இடம் பிடிக்கும் என்று நம்பலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.