அரசன் படத்திலிருந்து அனிருத் விலகல்?
நடிகர் சிலம்பரசனின் “அரசன்” படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியதாக வெளியான செய்திகள் குறித்து...
நடிகர் சிலம்பரசன் நடிக்கும் “அரசன்” திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியதாக வெளியான செய்திகளுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு பதிலளித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறனின் வெற்றிப் படங்களில் ஒன்றான “வடசென்னை” படத்தின் கதையுலகில் உருவாகி வரும் புதிய படம் “அரசன்”. இப்படத்தை, தயாரிப்பாளர் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.
Advertisement
Advertisement
நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, யோகலட்சுமி, ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் முதல்முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் “அரசன்” படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியதாகச் செய்திகள் வெளியாகின.
இதுபற்றி, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (நவ. 18) பதிலளித்த தயாரிப்பாளர் தாணு,
“யூகங்களுக்கும், கற்பனைகளுக்கும் பதிலளிக்க முடியாது. விரைவில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அவைத் தொடங்கப்படும்போது அனைவரும் அறிந்துகொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழுவால் வெளியிடப்பட்ட “அரசன்” படத்தின் புதிய புரோமோ விடியோ மிகவும் சாதரனமாக இருந்ததால், நடிகர் சிலம்பரசனின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.