சூர்யா தயாரிப்பில் கார்த்தியின் 'விருமன்' முதல் பார்வை போஸ்டர் வெளியானது
சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். முத்தையா இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பருத்தி வீரன் படத்துக்கு பிறகு மதுரை மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என கார்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்திருந்தார்.
இந்தப் படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.