விக்ரம் - துருவ் இணைந்து நடித்துள்ள மகான் டீசர் வெளியானது
விக்ரம் - துருவ் இணைந்து நடித்துள்ள மகான் டீசர் வெளியானது.
விக்ரம் - துருவ் முதன்முறையாக இணைந்து நடித்த மகான் திரைப்படம் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படத்திலிருந்து சூரையாட்டம், எவன்டா எனக்கு கஷ்டடி போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க | கெட்ட வார்த்தை பதிவிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்வின் குமார்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மதுவினால் ஏற்படும் தீங்குகளை சொல்லி, மகாத்மா காந்தியின் நினைவாக காந்தி மகான் எனப் பெயரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒருவன், மதுக்கடைகளை நடத்தும் அளவுக்கு தள்ளப்படுவதுதான் இந்தப் படத்தின் கதையாக இருக்கும் என்று டீசரின் வாயிலாக புரிந்துகொள்ள முடிகிறது.
இருப்பினும் படம் வெளியானால் தான் படத்தின் முழுமையான கதை என்னவென்பது தெரியவரும். டீசரின் கடையில் தான் துருவ் காட்டப்படுகிறார். அவரது வேடம் என்னவென்பது ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.