மீண்டும் பூஜா ஹெக்டே? சூர்யாவுக்கு ஜோடியாகிறார்!
இயக்குநர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை பூஜா ஹெக்டே ஜோடியாக நடிப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான் ‘விக்ரம்’ படத்தில் ‘ரோலக்ஸ்’ கதாப்பாத்திரத்தில் நடித்த சூர்யா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இவர் தற்போது வெற்றி மாறனின் ‘வாடி வாசல்’, இயக்குநர் பாலாவின் பெயரிடப்படாத படத்திலும் நடித்துக் கொண்டுள்ளார். இதற்கு அடுத்துதான் இயக்குநர் சிவா படத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழில் ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் ரீ என்ரி கொடுத்துள்ளார் பூஜா ஹெக்டே. ராதே சிஷாம், சாகோ படத்தின் தயாரிப்பாளர் யுவி கிரியேஷன்ஸ் சிவா படத்திற்கும் பூஜாவை பரிந்துரைத்துள்ளது. படக்குழு அவரை அணுகியதற்கு பச்சைக்கொடியை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.