'தி கிரே மேன்' ஆங்கில படத்தில் வாய்ப்பு கிடைத்தது எப்படி ? மனம் திறந்த தனுஷ்
தி கிரே மேன் இணைய தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என நடிகர் தனுஷ் அமெரிக்க பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
தி கிரே மேன் இணைய தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என நடிகர் தனுஷ் அமெரிக்க பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
நடிகர் தனுஷ் தற்போது தி கிரே மேன் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை இயக்கிய ருசோ பிரதர்ஸ் (ஆண்டனி மற்றும் ஜோ ருசோ) இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ரியான் காஸ்லிங், கிரிஸ் எவன்ஸ், அனா டே ஆர்மாஸ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று (ஜூலை 10) அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. திரையிடல் நிகழ்வுக்கு பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Advertisement
Advertisement
அப்போது இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு பதிலளித்த தனுஷ், எனக்கு எப்படி இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது என தெரியவில்லை. நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் நிறுவனம் ஒரு ஆங்கிலப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாக தெரிவித்தனர்.
இதையும் படிக்க | 'குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவெடுத்தால் விருது' - நடிகர் ராம் சரணின் மனைவிக்கு ஜக்கி வாசுதேவ் அறிவுரை
மேலும் இது பெரிய படம் என்றனர். எந்த படம், என்ன படம் என நான் கேள்வி எழுப்பியபோது, அதனை சொல்வதற்கு முதலில் உங்கள் அனுமதி வேண்டும் என்றனர். பிறகு அவர்கள் சொன்னபோது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
இதனை விட பெரிதாக எனக்கு கிடைக்காது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நடிகராக நான் கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு. நான் நன்றாக நடிப்பேன் என எனக்கு நம்பிக்கையிருக்கிறது. என்றார்.
தி கிரே மேன் என்ற நாவலின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வருகிற ஜூலை 22 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.