காலிந்தி குஞ்சில் யமுனையில் மீண்டும் நச்சு நுரை
தில்லியின் காலிந்தி குஞ்ச் அருகே யமுனா நதியில் திங்களன்று நச்சு நுரை மிதப்பதைக் காண முடிந்தது. நதியை மூடிய இந்த வெள்ளை நுரையை அகற்றும் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
தில்லியின் காலிந்தி குஞ்ச் அருகே யமுனா நதியில் திங்களன்று நச்சு நுரை மிதப்பதைக் காண முடிந்தது. நதியை மூடிய இந்த வெள்ளை நுரையை அகற்றும் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
யமுனா நதி மாசுபாடு குறித்த தொடா்ச்சியான கவலைகளுக்கு மத்தியில், நதியின் மேற்பரப்பில் அடா்த்தியான வெள்ளை நுரைப் படலங்கள் மிதப்பதை அப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் காட்டின. பாதிக்கப்பட்ட பகுதியில் நுரையை அகற்ற தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தென்கிழக்கு தில்லியில் உள்ள காலிந்தி குஞ்ச் தடுப்பணை அருகே யமுனா நதிக்கரையில், குறிப்பாக குளிா்கால மாதங்களில், நச்சு நுரை உருவாவதற்கு, சவா்க்காரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் உள்ளிட்ட அதிக அளவிலான மாசுபடுத்திகள் நதியில் கலப்பதே காரணமாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
நுரை குவிவது நதியின் நீரின் தரம் மோசமடைவது குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.