’ராக்கெட்ரி’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
‘ராக்கெட்ரி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ராக்கெட்ரி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மாதவன் தயாரித்து, இயக்கி நடித்துள்ள 'தி ராக்கெட்ரி - நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க | விஜய் தேவரகொண்டா - மைக் டைசன் நடிக்கும் 'லைகர்' டிரைலர் வெளியீடு
Advertisement
Advertisement
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த இப்படத்தில் சிம்ரன், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இப்படம் வருகிற ஜூலை 26 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.