முகப்பு
செய்திகள்

நான் இந்தளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதில்லை: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்

தான் இந்தளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதில்லை என்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விக்ரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்.

Updated On : 5 ஜூன் 2022, 8:45 pm IST
பகிர்:

தான் இந்தளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதில்லை என்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விக்ரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3ஆம் தேதி வெளியாகியுள்ள படம் விக்ரம். இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ‘விக்ரம்’ திரைப்படம் தமிழகத்தில் வெளியான முதல்நாளில் (வெள்ளிக்கிழமை) ரூ.20.61 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அத்தகவல்களில், இப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.32 கோடியையும் உலக அளவில் ரூ.48.68 கோடியையும்  வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தாண்டில் வெளியான தமிழ்ப் படங்களில் முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற பீஸ்ட் மற்றும் வலிமை திரைப்படத்திற்கு அடுத்த இடத்தில் ‘விக்ரம்’ இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் தான் இந்தளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதில்லை என்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விக்ரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், நான் இந்தளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதில்லை. விக்ரம் படத்திற்கும் எனக்கும் நீங்கள் கொடுத்த அங்கீகாரம் மிகவும் பெரிது.

இந்த அன்பை நான் உங்களுக்கு எப்படி திருப்பிக்கொடுப்பேன் என்று தெரியவில்லை. கமல்ஹாசனுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். எல்லாருக்கும் நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.