நான் சாய் பல்லவியின் ரசிகன்: பிரபல பாலிவுட் இயக்குநர்
படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன். டிரெய்லர் தீவிரமாகவும்...
நானும் சாய் பல்லவியின் ரசிகன் தான் என பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் கூறியுள்ளார்.
விராட பர்வம் (Virata Parvam) என்கிற தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார் பிரபல நடிகை சாய் பல்லவி. வேணு இயக்கிய இப்படத்தில் ராணா டக்குபதி, சாய் பல்லவி, ப்ரியா மணி, நிவேதா பெத்துராஜ், நந்திதா தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். ஜூன் 17 அன்று இப்படம் வெளியாகிறது.
விராட பர்வம் படத்தின் டிரெய்லரைப் பார்த்துவிட்டு பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், ட்விட்டரில் கூறியதாவது:
Advertisement
Advertisement
இது அருமையாக உள்ளது ராணா. படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன். டிரெய்லர் தீவிரமாகவும் வெளிப்படையாகவும் ஆர்வமூட்டும் விதமாகவும் உள்ளது. நீங்கள் அபாரமாக இருக்கிறீர்கள். மற்றும் நானும் சாய் பல்லவியின் ரசிகன் தான் என்று கூறியுள்ளார்.