செம்பி டிரெய்லர்: கோவை சரளாவைப் பாராட்டிய கமல்
காடன் படத்துக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கியுள்ள படம் - செம்பி.
காடன் படத்துக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கியுள்ள படம் - செம்பி.
2010-ல் பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் அவருக்குப் பெரிய புகழை அளித்தது. அதன்பிறகு கும்கி, கயல், தொடரி, காடன் போன்ற படங்களை இயக்கினார்.
அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமையா, நிலா போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவு - ஜீவன். இப்படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் - பிரபு சாலமன்.
Advertisement
Advertisement
இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்த கமல் ஹாசன், கோவை சரளாவைப் பாராட்டியுள்ளார். மேலும் தன்னை நேரில் சந்தித்த படக்குழுவினருக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.