FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மீண்டும் ஒரு 'அண்ணாத்த'யா? 'வேதாளம்' ரீமேக் பட போஸ்டர் குறித்து ரசிகர்கள் கருத்து

வேதாளம் பட தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 

1 பிப்ரவரி 2024, 2:02 pm IST
பகிர்:

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த வேதாளம் திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அண்ணன் - தங்கை பாசத்தை பிரதானமாக கொண்ட இந்தப் படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். அனிருத்தின் பாடல்கள் இந்தப் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தது. 

இந்த நிலையில் இந்தப் படம் சிரஞ்சீவி நடிப்பில் போலா ஷங்கர் என்ற பெயரில் தெலுங்கில் உருவாகி வருகிறது. வேதாளம் திரைப்படமே பாட்ஷா படத்தின் தழுவல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. போலா ஷங்கர் படத்தை மெஹர் ரமேஷ் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் சிரஞ்சீவியின் தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

அண்ணாத்த படத்திலும் நடிகர் ரஜினிகாந்த்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றதாக கூறப்பட்டாலும் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து.

இந்த நிலையில் போலா ஷங்கர் படத்திலும் கீர்த்தி சுரேஷ் சிரஞ்சீவியின் தங்கையாக நடிப்பதால் அவருக்கு மீண்டும் ஒரு அண்ணாத்த என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

முன்னதாக நடிகர் விஜய்யின் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி 150 படத்திலும் சிரஞ்சீவி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments