ஐரோப்பாவையே இந்தியாவுக்கு கொண்டுவந்துட்டாங்களே.! பிரபாஸின் ராதே ஷ்யாம் உருவான விதம் விடியோவாக வெளியானது
பிரபாஸ் - பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் உருவான விதம் விடியோவாக வெளியாகியுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் வருகிற மார்ச் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, சத்யராஜ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பிரபாஸ் கைரேகை நிபுணராக நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள நிலையில், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
கடந்த 1970களில் ஐரோப்பா பின்னணியில் இந்தப் படத்தின் கதைக் களம் அமைந்துள்ளது. இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு டிரெய்லர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் உருவானவிதம் விடியோவாக வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ஐரோப்பாவை தத்ரூபமாக செட் போட்டு மற்றும் விஎஃப்எக்ஸ் உதவியுடன் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளதைக் காட்டுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.