FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

'மாமன்னன்' முதற் கட்ட படப்பிடிப்பு நிறைவு

உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் மாமன்னன் முதற் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

1 பிப்ரவரி 2024, 2:19 pm
பகிர்:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வரும் படம் மாமன்னன். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். 

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்த நிலையில் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.

முதற் கட்டப் படப்பிடிப்பானது சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. கர்ணன் படத்தைப் போல மாமன்னன் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருவதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments