தொலைக்காட்சியிலிருந்து ஓடிடிக்கு மாறிய காஃபி வித் கரண் நிகழ்ச்சி
காஃபி வித் கரண் நிகழ்ச்சி இனிமேல் ஓடிடியில் வெளியாகும் எனப் பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் கூறியுள்ளார்.
காஃபி வித் கரண் நிகழ்ச்சி இனிமேல் ஓடிடியில் வெளியாகும் எனப் பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் கூறியுள்ளார்.
1998- குச் குச் ஹோதா ஹை படத்தில் இயக்குநராக அறிமுகமானார் கரண் ஜோஹர். தயாரிப்பாளர் யாஷ் ஜோஹரின் மகன். கபி குஷி கபி கம், கபி அல்விடா நா கெஹ்னா, மை நேம் ஈஸ் கான் ஸ்டூடண் ஆஃப் தி இயர், பாம்பே டாக்கீஸ், ஏ தில் ஹை முஷ்கில் ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்றார். ஓடிடிக்காக லஸ்ட் ஸ்டோரீஸ், கோஸ்ட் ஸ்டோரீஸ் படங்களில் தலா ஒரு பகுதியை இயக்கினார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றும் கரண் ஜோஹர், பல படங்களைத் தயாரித்துள்ளார்.
கடைசியாக 2016-ல் படம் இயக்கிய கரண் ஜோஹர், ஐந்து வருடங்களுக்குப் பிறகு தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை கடந்த வருடம் அறிவித்தார். ரன்வீர் சிங், ஆலியா பட் நடிக்கும் ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி என்கிற படத்தை கரண் ஜோஹர் இயக்கி வருகிறார்.
Advertisement
Advertisement
காஃபி வித் கரண் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஸ்டார் வேர்ல்ட் தொலைக்காட்சியில் 2004 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் இதனை நடத்தி வருகிறார். பிரபலங்களுடனான கரண் ஜோஹரின் உரையாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் காஃபி வித் கரண் நிகழ்ச்சி இனிமேல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாது என நேற்று அறிவித்தார் கரண் ஜோஹர். இந்நிலையில் கரண் ஜோஹரின் 7-ம் பருவம் டிஸ்ட்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகும் என அடுத்ததாகப் புதிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.