முகப்பு
செய்திகள்

கேஜிஎஃப் 3: தயாரிப்பாளரின் திட்டம் என்ன?

இதனால் அதிக அளவிலான ரசிகர்களைச் சுலபமாகச் சென்றடைய முடியும் என்றார். 

Updated On : 14 மே 2022, 4:39 pm IST
பகிர்:

கேஜிஎஃப் 3 படம் குறித்த புதிய தகவலை அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

யஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அதிகமாக வசூலித்த 2-வது ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்ற கேஜிஎஃப் 2, தற்போது ரூ. 400 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. இந்திய அளவில் எல்லா மொழிகளிலும் ரூ. 900 கோடிக்கு அதிகமாகவும் உலக அளவில் ரூ. 1170 கோடிக்கு அதிகமாகவும் வசூல் செய்துள்ளது. 

Advertisement

இந்நிலையில் கேஜிஎஃப் பாகம் 3 பற்றி அதன் தயாரிப்பாளர் விஜய் ஒரு பேட்டியில் கூறியதாவது:

இயக்குநர் பிரசாந்த் நீல், சலார் படத்தில் மும்முரமாக உள்ளார். 30-35% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது. இந்த வருட அக்டோபர் - நவம்பரில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். எனவே அக்டோபருக்குப் பிறகு கேஜிஎஃப் 3 படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளோம். 2024-ல் படத்தை வெளியிடுவோம். மார்வெல் உலகம் போல இதை ஒரு தொடராகக் கொண்டு செல்வோம். வெவ்வேறு படங்களில் இருந்து வெவ்வேறு கதாபாத்திரங்களைச் சேர்த்து டாக்டர் ஸ்டிரேஞ்ச் போல ஒன்றை உருவாக்கவுள்ளோம். இதனால் அதிக அளவிலான ரசிகர்களைச் சுலபமாகச் சென்றடைய முடியும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.