தி லெஜண்ட் படத்தின் அடுத்த பாடல் எப்போது?
தி லெஜண்ட் படத்தின் 2-வது பாடம் மே 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி லெஜண்ட் படத்தின் 2-வது பாடம் மே 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றவருமான லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்கம் - ஜேடி - ஜெர்ரி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் ஊர்வசி, கீத்திகா, விவேக், நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் முதல் பாடலான மொசலோ மொசலு பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. யூடியூப் தளத்தில் 12 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் அடுத்தப் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
வாடிவாசல் என்கிற இப்படத்தின் 2-வது பாடல் மே 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.