கேஜிஎஃப் இயக்குநருடன் இணையும் ஜூனியர் என்டிஆர்: அறிவிப்பு
ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளான இன்று இரு புதிய பட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளான இன்று இரு புதிய பட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கொரடாலா சிவா. இப்படத்துக்கு இசை - அனிருத். ரத்னவேலு, சாபு சிரில், ஸ்ரீகர் பிரசாத் எனப் பல பிரபலமான தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இது ஜூனியர் என்டிஆரின் 30-வது படம்.
இத்துடன் 31-வது பட அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் புகழடைந்துள்ள இயக்குநர் பிரஷாந்த் நீல், தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். இதன்பிறகு கேஜிஎஃப் 3 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தையும் இயக்கவுள்ளார் பிரஷாந்த் நீல். இருவரும் இணையும் படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.