‘இரவின் நிழல்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘இரவின் நிழல்’ படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘இரவின் நிழல்’ படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இரவின் நிழல்’. இப்படம் உலக சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக நான் லீனியர் வகையில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘மாயவா தூயவா’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ‘இரவின் நிழல்’ திரைப்படம் வருகிற ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
நடிகர் பார்த்திபனுடன் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும், இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் விரைவில் திரையிடப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.