அடுத்த விஜய் படம் 100 சதவிகிதம் என்னுடைய படமாக இருக்கும்: லோகேஷ் கனகராஜ் உறுதி
சமீபத்திய யூடியூப் பேட்டி ஒன்றில் அடுத்த விஜய் படம் 100 சதவிகிதம் என்னுடைய பாணியிலான படமாகவிருக்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உறுதியளித்துள்ளார்.
சமீபத்திய யூடியூப் பேட்டி ஒன்றில் அடுத்த விஜய் படம் 100 சதவிகிதம் என்னுடைய பாணியிலான படமாகவிருக்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உறுதியளித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் ‘மாஸ்டர்’. இது வழக்கமான விஜய் படங்கள் போல் இல்லை. அதே சமயம் லோகேஷின் படம் போலவும் இல்லை. 50-50 படமாகவே இருந்தது. தற்போது, கமல்ஹாசன் நடித்து ஜூன்3இல் வெளிவரவிருக்கும் 'விக்ரம்’ பட புரமோஷன் ஒன்றில் அடுத்த விஜய் படம் குறித்த தகவலைக் கூறினார்.
“அவ்வளவு பெரிய நடிகரை இயக்கும் போது திடீரென எதையும் புதியதாக எடுக்க முடியாது. அவரைச் சுற்றி பெரிய வணிகம் இருக்கிறது. அதனாலயே 50-50 எடுத்தேன். எனக்கு இப்போது விஜய் சாரை தெரியும். அவருக்கும் என்னைத் தெரியும். மக்களுக்கு என்ன வேண்டுமென எங்களுக்கும் தெரியும். அதனால் அடுத்த படம் 100 சதவிகிதம் என்னுடைய பாணியிலான படமாகவே இருக்கும்” என லோகேஷ் கனகராஜ் கூறினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.