‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநரின் அடுத்த படம் அறிவிப்பு!
‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநர் சரவணின் அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியது.
தமிழில் இயக்குநர் சரவணனின் ‘எங்கேயும் எப்போதும்’ படம் 2011இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. சமீபத்தில் அதன் 10 ஆண்டு முடிவடைந்தது. இவன் வேற மாதிரி, வலியவன் படம் அந்த அளவுக்கு வெற்றி பெறாததால் பின்னர் பட வாய்ப்பு குறைந்தது. பின்னர் கன்னட படத்திற்கு சென்ற இயக்குநர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் புதிய படம் இயக்குகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஸ்ரீ ஆர்க் மீடியா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘நாடு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இதில் தர்ஷன் குளிரில் நடிங்கியபடி மலைப்பகுதியில் உட்கார்ந்திருகிறார். படம் இறுதி கட்ட பணியில் இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.