முதன்முறையாக ஓடிடியில் களமிறங்கும் எஸ்.ஜே. சூர்யா!
புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ‘வதந்தி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ‘வதந்தி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேரம் நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகன் மற்றும் முக்கியமான படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
Advertisement
Advertisement
தற்போது புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் ‘வதந்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது இணையத்தொடராக அமேசானில் வெளிவர உள்ளது. இது புஷ்கர் காயத்ரி தயாரிப்பின் 2வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது முதல் தயாரிப்பில் வெளியான சுழல் நல்ல வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து இந்த தொடர் மீதும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த இணையத் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் டிசம்பர் 2ஆம் தேதி அமேசானில் நேரடியாக வெளியாக உள்ளது. இதன் டிரைலர் நாளை வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரை லீலை, கொலைகாரன் படத்திஜ் இயக்குநர் ஆண்ட்ரிவ் லூயிஸ் இயக்கியுள்ளார். நடிகை சஞ்சனா, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Related Article
நயன்தாரா- பிருத்விராஜ் நடிக்கும் ‘கோல்டு’: ரிலீஸ் பற்றிய அதிகாரபூர்வ தகவல்!
புதுப்பொலிவுடன் திரைக்கு வருகிறது ரஜினியின் ‘பாபா’!
இயல்பு நிலைமைக்கு திரும்பிய ராஷ்மிகா: அசத்தும் புதிய புகைப்படங்கள்!
பூங்குழலியாக அசத்தும் தர்ஷா குப்தா: வைரலாகும் புகைப்படங்கள்!
பிரியாமணியின் ‘டிஆர்.56’: இசை மற்றும் டிரைலர் வெளியானது!