நடிகர் அப்பாஸ் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் அப்பாஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் அப்பாஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய்யாக அறியப்பட்டவர் நடிகர் அப்பாஸ். இவர் நடிப்பில் வெளியான ‘காதல் தேசம்’, ‘மின்னலே’ உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு வெளியேறினார்.
தற்போது, நியூசிலாந்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: வெளியானது 'கைதி' ஹிந்தி ரீமேக் டீசர்
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் காலில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவைச் சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பதிவிட்ட அப்பாஸ், ‘மிகவும் பதற்றமாகிவிட்டேன். அனைவரின் பிராத்னைகளுக்கு நன்றி.விரைவில் வீடு திரும்புவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.