மனைவியுடன் 'பாரதி கண்ணம்மா' நடிகர் பகிர்ந்த படம்!
நடிகர் சுகேஷ்க்கு திருமணம் நடைபெற்றது அவரின் ரசிகர்கள் பலருக்கு தெரியாது என்பதால், தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் அகிலன் பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சுகேஷ், தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து திருமணத்தை உறுதி செய்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்ட சுகேஷ், மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளதால், அவரின் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
ஏனெனில், நடிகர் சுகேஷ்க்கு திருமணம் நடைபெற்றது அவரின் ரசிகர்கள் பலருக்கு தெரியாது என்பதால், தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர். இந்தத் தொடரின் கதாபாத்திரங்கள் குடும்ப ரசிகர்களையும் தாண்டி இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது என்பதற்கு, இந்தத் தொடரின் பாத்திரங்களை வைத்துப் பகிரப்படும் மீம்ஸ்களே உதாரணம்.
அந்த அளவுக்கு பாரதி கண்ணம்மா தொடர் அனைத்துத்தரப்பிலும் ரசிகர்களைக் கொண்டுள்ளது. இந்தத் தொடரில் அகிலன் பாத்திரத்தில் நடித்து வரும் சுகேஷ் சந்திரசேகர் பாரதிக்கு இணையாகவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கு முன்பு அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகருக்கு பதிலாக சுகேஷ் ஒப்பந்தமானார். தற்போது ஓர் ஆண்டுக்கும் மேலாக அகிலன் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த மாதம் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்ட அவர், தன்னுடைய மனைவியோடு முதல் மாத திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.
எளிமையாக திருமணம் நடந்து முடிந்ததால், ஒரு மாத நிறைவை பிரமாண்டமாக மேடை அமைத்துக் கொண்டாடியிருக்கிறார். இந்த புகைப்படங்களைக் கண்ட அவரின் ரசிகர்கள் சுகேஷுக்கும் அவரின் மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.