முகப்பு
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள 'பொன்னியின் செல்வன்' சேலை - விலை இவ்வளவா?

தீபாவளியை முன்னிட்டு பொன்னியின் செல்வன் சேலை விற்பனைக்கு வந்துள்ளது. 

Updated On : 8 அக்டோபர் 2022, 5:29 pm IST
பகிர்:

தீபாவளியை முன்னிட்டு பொன்னியின் செல்வன் சேலை விற்பனைக்கு வந்துள்ளது. 

பொதுவாக பிரபல நடிகர்களின் உருவம் பொறித்த உடைகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.  அதனை அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் வாங்கி பெருமையுடன் அணிவர். சக்தி மான் தொடர் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அந்த உடையும் கடைகளில் விற்பனைக்கு வந்தது. 

அந்த வகையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு பொன்னியின் செல்வன் சேலை விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சேலையில் பொன்னியின் செல்வன் நடிகர்களின் படங்கள், மற்றும் வாள் போன்றவை இடம்பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement

பொன்னியின் செல்வன் சேலை இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் விலை ரூ.2100 என்று கூறப்படுகிறது. 

பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த வாரம் வெளியாகவிருந்த படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments