முகப்பு
செய்திகள்

''விஜய் ரசிகர்களே, என் வார்த்தைய குறிச்சு வச்சுக்கோங்க'' - 'வாரிசு' குறித்து நடன இயக்குநர் ஜானி

வாரிசு படம் தொடர்பான சுவாரசியத் தகவலை நடன இயக்குநர் ஜானி பகிர்ந்துள்ளார். 

Updated On : 14 அக்டோபர் 2022, 4:58 pm IST
பகிர்:

வாரிசு படம் தொடர்பான சுவாரசியத் தகவலை நடன இயக்குநர் ஜானி பகிர்ந்துள்ளார். 

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல் காட்சி ஒன்று மட்டும் படமாக்காமல் இருப்பதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் நடன இயக்குநர் ஜானி தனது ட்விட்டர் பக்கத்தில், ''தளபதி விஜய் ரசிகர்களே, என் வார்த்தைகளை குறிச்சு வச்சுக்கோங்க. தளபதி விஜய்யின் மாஸான நடனத்தைக் காண தயாராகுங்கள். எவரும் திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கப்போவதில்லை'' என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

மேலும் பாடல் நடன ஒத்திகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இதனால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். 

முன்னதாக இசையமைப்பாளர் தமன், தன் வாழ்க்கையின் முக்கிய நாள் எனவும் பல நாள் கனவு நனவானதாகவும் தெரிவித்திருந்தார். விஜய் பாடியதைத் தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இப்போது நடன இயக்குநர் ஜானியின் பதிவு ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments