FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வதந்திகளைப் பொய்யாக்கிய 'வாரிசு' புதிய போஸ்டர்: ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் விஜய்யின் வாரிசு படத்திலிருந்து வாரிசு படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

Updated On : 24 அக்டோபர் 2022, 11:59 am IST
பகிர்:

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்திலிருந்து தீபாவளியை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் கையில் சுத்தியலுடன் மாஸாக விஜய் காட்சியளிக்கிறார். 

மேலும் கேஜிஎஃப் படத்திலும் இதே போல யஷ் சுத்தியலுடன் இருக்கும் போஸ்டரைப் பகிர்ந்து வாரிசு போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதாக கன்னட ரசிகர்கள் கூற,  இரு ரசிகர்களும் காரசாரமாக விவாதித்துக்கொண்டனர். 

மற்றொருபுறம் இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வாரிசு பொங்கலுக்கு வெளியாவதை இந்த போஸ்டர் உறுதிசெய்துள்ளது. முன்னதாக பிரபாஸின் ஆதிபுருஷ் பொங்கலுக்கு வெளியாவதால் வாரிசு பட ரிலீஸ் தள்ளிவைக்கப்படும் என்று கூறப்பட்டது. 

காரணம் பிரபாஸ் தெலுங்கில் பெரிய நட்சத்திரம். வாரிசு தமிழ், தெலுங்கு ரசிகர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆதிபுருஷ் வெளியானால் வாரிசு பட வசூல் பாதிக்கும் என தயாரிப்பாளர் தில்ராஜு கருதுவதாகவும், ரிலீஸ் தேதியை மாற்ற ஆலோசித்துவருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த தகவலை வெறும் வதந்தி என வாரிசு பட போஸ்டர் நிரூபித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments