தனுஷ் நடிக்கும் வாத்தி: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
தனுஷ் நடிப்பில் உருவாகும் வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சிற்றம்பலம் படத்துக்குப் பிறகு நானே வருவேன், கேப்டன் மில்லர், வாத்தி எனத் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். நானே வருவேன் இம்மாதம் வெளியாகவுள்ளது.
தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கி வரும் படம் - வாத்தி. இசை - ஜி.வி. பிரகாஷ். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் வெளிவரவுள்ளது. தெலுங்கில் இப்படத்துக்கு சார் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகும் வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 அன்று வாத்தி படம் வெளியாகும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.