அஜித்குமார் நடிக்கும் படத்தின் பெயர் 'துணிவு'
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு 'துணிவு' என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு இன்று மாலை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து துணிவு என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாக 'துணிவு' உள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு 'துணிவு' எனப் பெரிடப்பட்டுள்ளது.
படிக்க | நடிகர்கள் கதிர், திவ்யபாரதி இணையும் ‘ஆசை’: முதல்பார்வை போஸ்டர் வெளியீடு
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்த நிலையில், துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இவர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான 'தீரன் அதிகாரம்' ஒன்று படத்திற்கு இசையமைத்தவர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, மிலன் படத்தொகுப்பு செய்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.