முகப்பு
செய்திகள்

பிரபல நடிகரின் தாயார் காலமானார்

பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.  

Updated On : 28 செப்டம்பர் 2022, 9:23 am IST
பகிர்:

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி இன்று காலமானார். அவருக்கு வயது 70.

நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும் நடிகர் மகேஷ் பாபுவின் தாயாருமான இந்திரா தேவி சற்று முன்பு காலமானார். சில காலமாக அவர் உடல்நலக்குறைவில் இருந்தார் என மகேஷ் பாபுவின் குடும்பத்தினர் இந்திரா தேவியின் மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இன்று அதிகாலை 4 மணிக்கு இந்திரா தேவி காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்திரா தேவிக்கு மூன்று மகள்களும் உள்ளார்கள். மகேஷ் பாபுவின் சகோதரர் ரமேஷ் பாபு கடந்த ஜனவரி மாதம் காலமானார். 

மகேஷ் பாபுவின் தாயார் மறைவுக்குப் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments