மாமன்னன் படத்தின் முதல் பார்வை வெளியாகும் தேதி அறிவிப்பு!
மாமன்னன் படத்தின் முதல் பார்வை வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாமன்னன் படத்தின் முதல் பார்வை வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.
மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மாமன்னன் திரைப்படத்தை தயாரிக்கிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், இப்படம் வருகிற ஜூன் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், மாமன்னன் திரைப்படத்தின் முதல் பார்வை மே 1 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.