செய்திகள்

பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்!

பாக்கியலட்சுமி தொடரில் நடித்துவரும் முக்கிய நடிகர் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.

DIN

பாக்கியலட்சுமி தொடரில் நடித்துவரும் முக்கிய நடிகர் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

கணவரால் ஏமாற்றப்படும் பெண், உழைப்பினால் சுயமாக முன்னேறி எப்படி குடும்பத்தை கவனிக்கிறாள் என்பதை மையமாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய கதையில், செழியனை விட்டு பிரிந்து, ஜெனி அவரது அம்மா வீட்டில் இருக்கிறார். அமிர்தா விவகாரம் எப்போது வெடிக்கும் என்று ஒரு பக்கம், ராதிகாவால் பாக்கியாவுக்கு தொடரும் பிரச்னை மற்றொரு பக்கம் என கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

தாசரதி.

இந்த நிலையில், ஜெனியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த மனோகரன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ஈரமான ரோஜாவே தொடரில்  நடித்த தாசரதி, இன்றைய எபிசோடிலிருந்து இத்தொடரில் நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT